Connect with us
Cinemapettai

Cinemapettai

nattamai-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நாட்டாமை மிக்ஸர் காமெடியில் வரும் இந்த பெண்ணை ஞாபகம் இருக்கிறதா? இப்போ அவங்க பெரிய நடிகையாம்!

1994 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் நாட்டாமை.

இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் நடித்திருப்பர். மேலும் இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

அப்படி அவர்கள் நடித்த காட்சிகளில் மிகவும் பிரபலமான ஒன்று கவுண்டமணிக்குப் பெண் பார்க்கச் செல்லும் காமெடி தான்.

அதில் நடுவில் ஒருவர் உட்கார்ந்து மிச்சர் சாப்பிடும் காட்சி அரசியலையே அசைத்துப் பார்த்தது. அந்த காமெடியில் வரும் பெண் யார் என்று தெரியுமா.

அந்த நடிகையின் பெயர் கீர்த்தி நாயுடு. தெலுங்கை பூர்வீகமாக கொண்ட அந்த நடிகை சென்னையில்தான் பிறந்து வளர்ந்தது எல்லாம்.

தற்போது தெலுங்கில் சின்னத்திரை நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

keerthi-naidu-cinemapettai

keerthi-naidu-cinemapettai

Continue Reading
To Top