நாட்டாமைக்கு ஹிந்தியில் வச்ச டைட்டில் என்ன தெரியுமா? இது தமிழ்ல கெட்ட வார்த்தையாச்சே!

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் நாட்டாமை. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகுமார் நடித்திருந்தார்.

விஜயகுமார் நடித்த காட்சிகள் அனைத்துமே இன்றும் ரசிகர்கள் மத்தியில் மீம்ஸ் போட பிரபலமாக இருந்து வருகின்றனர். விஜயகுமார் பேசும் ஒவ்வொரு வசனங்களும் இன்று பல நிகழ்வுகளுக்கு ஒத்துப் போகின்றன.

அதுமட்டுமில்லாமல் அன்றைய காலகட்டங்களில் வெளியான படங்களில் அதிக நாட்கள் தியேட்டரில் ஓடிய படமாகவும், அதிக வசூல் செய்த படமாகவும் இருந்தது. நாட்டாமை படத்தின் வெற்றியை பார்த்து அன்றைய முன்னணி நடிகர்களே மூக்கின்மேல் விரல் வைத்தன குறிப்பிடத்தக்கது.

இப்படி தமிழில் பல சாதனைகள் படைத்த நாட்டாமை திரைப்படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட வெளியானது. இந்தப் படம் தெலுங்கில் பெத்தராயுடு என்ற பெயரில் ரீமேக் ஆனது.

மேலும் ஹிந்தியிலும் இந்த படம் ரீமேக். ஹிந்தியில் நாட்டாமை ரீமேக்கில் பிரபல நடிகர் அணில் கபூர் நடிப்பில் வெளியானது. ஆனால் அந்த படத்திற்கு ஹிந்தியில் வைக்கப்பட்ட டைட்டிலை தமிழில் சொல்லிக் கூட பார்க்க முடியாது.

கெட்ட வார்த்தை போலவே இருக்கும் அந்த படத்தின் தலைப்பை புகைப்படங்களில் பார்த்துக் கொள்ளுங்கள். இது போன்று பல படங்களுக்கும் இருக்கும் டைட்டில்கள் தமிழ் மொழியில் உச்சரிப்பதற்கு கெட்ட வார்த்தை போலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

nattamai-hindhi-remake-title
nattamai-hindhi-remake-title
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்