Tamil Cinema News | சினிமா செய்திகள்
OTTயில் வெளியான புத்தம் புது காலை படத்தை கழுவி ஊத்திய நட்ராஜ்- வைரலாகுது ட்வீட்
புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் நட்டி எனும் நட்ராஜ் சுப்பிரமணியம். இவரது கேமரா ஒர்க் பாலிவுட் வரை இவரை பிரபலமாக்கியுள்ளது என்னமோ உண்மை தான். “சதுரங்க வேட்டை” தொடங்கி பல்வேறு வித்தியாசமான படங்களில் நடித்துள்ளார் நட்டி.
அக்டோபர் 16-ந் தேதி அமேசான் பிரைம்மில் வெளியான படம் புத்தம் புது காலை. கோலிவுட்டின் டாப் 5 இயக்குனர்கள், கொரோனா மற்றும் லாக் டவுன் பின்னணியில் எடுக்கப்பட்ட ஐந்து ஷார்ட் பிலிம்களின் ஆந்தாலஜி தொகுப்பே புத்தம் புது காலை.
சுதா கொங்கராவின் இளமை இதோ இதோ (தங்கள் லைப் பார்ட்னரை இழந்த வயது முதிர்ந்த இருவருக்கும் இடையிலான காதல்), கவுதம் வாசுதேவ் மேனனின் அவரும் நானும் அவளும் நானும் (தாத்தாவுக்கும் பேத்திக்கும் இடையிலான பாசம்), சுகாசினி மணிரத்னம் இயக்கி நடித்த காஃபி எனி ஒன்? (நோயாளியை மருத்துவமனையில் உள்ளதை விட குடும்ப சூழலில் எவ்வாறு குணப்படுத்த முடியும்), ராஜீவ் மேனனின் ரியூனியன் (இன்று டாக்டர், போதைக்கு அடிமையான இருவரின் பாலிய மற்றும் இன்றைய காதல்) , கார்த்திக் சுப்புராஜின் மிராக்கில் (யாருக்கு லக் அடிக்கிறது அதீத பணம் கிடைக்கிறது).

natraj tweet
இவை தான் இயக்குனர்களும், அவர்களின் படைப்புகளும். இப்படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனத்தையே பெற்றது. இந்நிலையில் இப்படங்களை பற்றி நட்ராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகின்றது. “புத்தம் புதுக் காலை. ஆகக் கொடுமை. வாழ்த்துக்கள். தாங்க முடியலடா சாமி” எனவும், மற்றொரு டுவிட்டில் “ஆக சிறந்தவர்கள் தோற்றால் வளர்பவர்களுக்கு இடம் கிடைக்காது” என்றும் பதிவிட்டுள்ளார்.
