Connect with us

Cinemapettai

நட்பே துணை தெலுங்கு ரீமேக்கில் சந்தீப் கிஷன்.. இணையத்தை கலக்கும் A1 எக்ஸ்பிரஸ் டிரைலர்

teststse

Videos | வீடியோக்கள்

நட்பே துணை தெலுங்கு ரீமேக்கில் சந்தீப் கிஷன்.. இணையத்தை கலக்கும் A1 எக்ஸ்பிரஸ் டிரைலர்

ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் வெளியாக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நட்பே துணை படத்தின் தெலுங்கு ரீமேக் A1 எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் சந்தீப் கிஷன் நடித்துள்ளார்.

சுந்தர் சி தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் வெளியான திரைப்படம் நட்பே துணை. ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படம் இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் இடம் பெற்ற பாடல்கள் குத்தாட்டம் போட வைத்தன. மீசைய முறுக்கு படம் அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் சுமாரான வெற்றியைப் பெற்றது நட்பே துணை. இந்நிலையில் நட்பேதுணை படத்தை தெலுங்கில் சந்தீப் கிஷன் ரீமேக் செய்துள்ளார்.

இது சந்தீப் கிஷனின் 25வது படமும் கூட. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் ரெஜினா கெஸன்ட்ரா ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் முன்னதாக பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது தெலுங்கில் சந்தீப் கிஷன் ஜோடியாக லாவண்யா திரிபாதி என்பவர் நடித்துள்ளார். மேலும் தமிழில் இசை அமைத்த ஹிப்ஹாப் தமிழா ஆதி தான் தெலுங்கிலும் இசையமைத்துள்ளார். குடியரசு தினவிழாவை முன்னிட்டு a1 எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

நட்பே துணை படத்தில் கவனிக்கப்பட்ட விஷயங்களில் மிகவும் முக்கியமானது வில்லனாக நடித்த கரு பழனியப்பன் வேடம்தான். நக்கல் நையாண்டி கலந்த வில்லன் வேடத்தில் கைதட்டல்களை அள்ளி இருப்பார். அந்த கதாபாத்திரம் தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றால் மட்டுமே A1 எக்ஸ்பிரஸ் படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top