fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

National Film Awards 2019: நவீன ‘சாவித்திரி’ கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது

keerthi-suresh-national-award

Tamil Cinema News | சினிமா செய்திகள்

National Film Awards 2019: நவீன ‘சாவித்திரி’ கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது

நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் சிறப்பாக நடித்த காரணத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாக் அஸ்விக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சமந்தா நடிப்பில் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் கடந்த ஆண்டு உருவானது. இந்த படம் தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் சாவித்திரியாக நடித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பலரது உள்ளங்களை வென்றார்.

இந்த படத்தில் கீர்த்தியின் நடிப்பை பார்த்து ஆந்திர மக்கள் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். இந்நிலையில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

66வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், குடியரசு தலைவர் கையால் அவருக்கு இந்த விருது வழங்கப்படும் கீர்த்தி சுரேஷூம், துல்கர் சல்மானும் இப்படத்தில் அற்புதமாக நடித்திருப்பார்கள். கீர்த்தி சுரேஷ் தன்னை சாவித்திரியாகவே பாவித்து வாழ்ந்திருப்பார்.

பல காட்சிகளில் கீர்த்தி சுரேஷா அல்லது சாவித்திரியா என்ற அளவுக்கு சந்தேகமே வந்துவிடும். வருங்காலங்களில் சாவித்திரி என்றவுடன் கீர்த்தி சுரேஷின் முகம் ஞாபகத்துக்கு வரலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top