Tamil Cinema News | சினிமா செய்திகள்
தேசிய விருது வரை பேசப்பட்டும் சீரியலில் நடிக்கும் இனியா.. பட வாய்ப்பு இல்லாததால் பரிதாபம்
யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இனியா. இவர் தனது இரண்டாவது படமான ‘வாகை சூடவா’ படத்தின் மூலம் பல விருதுகளை தட்டிச் சென்றார்.
தேசிய விருது பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும் அளவிற்கு இவரது நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தன.
அதற்குப் பின்னர் மௌனகுரு, அம்மாவின் கைபேசி, கண்பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள், நினைத்தது யாரோ, புலிவால், நான் சிகப்பு மனிதன், கோடிட்ட இடங்களை நிரப்புக, பொட்டு ஆகிய படங்களின் மூலம் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.
இந்த வருடத்தில் காபி என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். ஆனாலும்கூட பட வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில் தற்போது சின்னத்திரையில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளாராம்.
அதாவது முன்னணி சேனல் ஒன்றில் ‘கண்ணான கண்ணே’ என்ற தொடரில் இனியா நடிக்க உள்ளாராம். இதில் அவர் வில்லியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடரில் ஹீரோவாக ராகுல் ரவி நடிக்க இருக்கிறார்.
இதன் சின்னத்திரை படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், இதை பார்ப்பதற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
