fbpx
Connect with us

Cinemapettai

‘கபாலி’யை கணவருடன் பார்த்த தேசிய விருது நடிகை

‘கபாலி’யை கணவருடன் பார்த்த தேசிய விருது நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி, தமிழக, இந்திய மற்றும் உலக சாதனை வசூல்களை ஒவ்வொன்றாக தகர்த்து வருகின்றது. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்பட படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

இந்நிலையில் ‘கபாலி’யை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்களும் ஆர்வத்துடன் நடித்து வருகின்றனர். கோலிவுட் திரையுலகினர் கிட்டத்தட்ட அனைவருமே ‘கபாலி’யை பார்த்து ரசித்துவிட்ட நிலையில் தற்போது தேசிய விருது பெற்ற பிரபல நடிகை வித்யாபாலன் நேற்று கணவர் சித்தார்த் ராய்கபூருடன் மும்பை அரோரா திரையரங்கில் ‘கபாலி’ படத்தை ரசித்து பார்த்துள்ளார்.

‘கபாலி’ படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த வித்யாபாலனும், அவருடைய கணவர் சித்தார்த் ராய் கபூரும் படம் அருமை என்றும் ரஜினியின் நடிப்பு மிக அருமை என்றும் கருத்து தெரிவித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top