தேசிய விருது கிடைத்த பின் ரித்திகா சிங் கூறிய நெகிழ்ச்சி கருத்து

12-Ritika-Singh63-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக நடிகை ரித்திகா சிங்குக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தற்போது பேசிய அவர், ” என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே இல்லை. இந்த தருணத்தில் எனக்கு ஆஸ்கர் கிடைத்தது போல் உணர்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினர் மற்றும் என்னை ஏற்றுகொண்ட ரசிகர்களுக்கு மிக்க நன்றி” என்றார்.