இந்திய அணிக்கு மட்டுமல்ல வெற்றி.. உலக அளவில் தமிழை வெற்றி பெறச் செய்த நடராஜனின் வீடியோ!

ஆஸ்திரேலிய தொடருக்கு செல்லும் இந்திய அணியில் வளையப்பயிற்சி பௌளராக மட்டும் நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் வருண் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக அணியிலும் இடம் பெற்றார்.

ஒருநாள் தொடரில் கடைசி போட்டியில் நடராஜன் அறிமுகம் ஆனார். அதன்பின் டி 20 தொடரில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணிக்காக ஆடினார். நேற்றைய போட்டிக்கு பின் நடராஜனிடம் கோலி இந்திய அணியின் டி 20 கோப்பையை கொடுத்தார்.

இந்த போட்டி முடிந்த பின் சோனி தொலைக்காட்சிக்கு முரளி கார்த்திக் எடுத்த பேட்டியில் நடராஜன் தமிழில் பேசினார். இந்திய கிரிக்கெட் உலகில் பல தமிழக வீரர்கள் சிறப்பாக ஆடி உள்ளனர். தினேஷ் கார்த்திக், முரளி விஜய், ரவி அஸ்வின் என்று பல வீரர்கள் தங்கள் முத்திரையை பதித்து உள்ளனர்.

அவர்கள் எல்லோரும் பெரும்பாலும் போட்டிக்கு பின்னர் ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஆனால் நேற்று நடந்த உரையாடலில் நடராஜன் தமிழில் பேசி அசத்தியுள்ளார்.

பிசிசிஐ வெளியிட்ட சில வீடியோக்களில் கூட இவர் தமிழில்தான் பேசினார். சர்வதேச அரங்கில் நடராஜனால் தமிழ் மீண்டும் ஒலிக்க தொடங்கி உள்ளது.மேலும் இவர் அணியின் முழு ஒத்துழைபிற்காக சில முக்கியமான வார்த்தைகளை கற்றுக்கொண்டு வருகிறார்.

நடராஜன் இந்திய அணியில்அணியில் தமிழில் பேசக்கூடியவர்கள் இடம் தமிழில் பேசுகிறார், ஆங்கிலத்தில் பேசுபவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுகிறார். நடராஜனின் எளிமையை கண்டு தமிழக மக்கள் மட்டுமின்றி, உலகம் முழுக்க இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.