கோவில் விசிட், மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்திய நடராஜன்! போட்டோ உள்ளே

சமீபத்தில் நடந்து முடிந்த இந்த ஆஸ்திரேலிய தொடரில் எதனை மறந்தாலும், பல வருடங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாத பெயராக நடராஜன் மனதில் பதிந்து விடுவார். நெட் பௌளராக டீம்மில் சேர்க்கப்பட்ட இவர் அதன் பின்னர் ஒரே தொடரில் 3 பிரிவுகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தட்டி சென்றுள்ளார்.

முதல் குழந்தை பிறந்தும் கூட இவர் இந்த தொடரில் பங்கேற்றது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் இவர் இந்தியா திரும்பியதும் ஊர் மக்கள் ஆரவார வரவேற்பும் கொடுத்தனர்.

இந்நிலையில் நடராஜன், பழநி தைப்பூச விழாவில் முருகப் பெருமானைத் தரிசிக்க நண்பர்களுடன் சென்றுள்ளார். பழநி முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் முடிக் காணிக்கை செலுத்தினார். தொடர்ந்து ரோப் கார் மூலம் மலைக்கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

natarajan

ரோப் கார் நிலையத்தில் நடராஜனை அடையாளம் கண்டுகொண்ட பக்தர்கள் அவருடன் போட்டி போட்டுக்கொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

natarajan

நடராஜன் மொட்டை அடித்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.