Sports | விளையாட்டு
63 அசாத்திய யார்க்கர், திணறிய பேட்ஸ்மேன்கள்.. மண்ணின் மைந்தருக்கு வாழ்த்துக் கூறிய மாண்புமிகு முதல்வர்
இந்தியா ஆஸ்திரேலியா தொடர் நடக்க விருக்கும் நிலையில், இந்திய அணி அறிவிக்கப்பட்டது, அதில் பல்வேறு மாற்றங்களை நேற்று தேர்வு குழு அறிவித்தது.
இந்த நிலையில் இந்திய அணியில் தற்போது சேலத்தை சேர்ந்த தமிழக வீரர் நடராஜன் தேர்வாகி உள்ளார். தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் முதலில் வலை பயிற்சி குழுவிற்கு தேர்வானார்.
தற்போது மொத்தமாக 15 பேர் கொண்ட அணியில் தேர்வாகி உள்ளார். இளம் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு டி20 போட்டியில் ஏற்பட்ட காயத்தினால் அவர் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், ஐபிஎல் தொடரில் மக்களின் மனதை கவர்ந்தவர் நடராஜன்.
கடைசி ஓவர்களை வீசி ரன் விகிதத்தை கட்டுப்படுத்துபவர் என பெயர் எடுத்தவர். தமிழக வீரர் நடராஜனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
முதல்வர் பழனிச்சாமியும், நடராஜனும் ஒரே மாவட்டத்தை சேர்த்தவர்கள் என்பதால் முதல்வர் பழனிச்சாமி சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற வேண்டுமென என தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

nataraja
