நட்டு நீ தகுதியானவன் தான்- வைரலாகுது பாண்டியாவின் ட்விட்டர் பதிவு

தமிழகத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன். இந்த வருட ஐபிஎல் இவருக்கு சிறப்பானதாக அமைந்தது. ஹைதெராபாத் அணியில் நடராஜனுக்கு 16 போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 16 விக்கெட்டுகள் வீழ்த்தினார். துல்லியமான யார்கர் பால் போட்டு அசத்தினார். இந்த வருடம் ஐபிஎல் இல் 71 யார்கர் பந்துகளை கடைசி கட்டத்தில் மட்டும் வீசி, 57 ரன்கள் தான் கொடுத்தார்.

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியின் பேக் அப் வீரராக சேர்க்கப்பட்டார். வருண் சக்ரவர்த்தி காயமாக டி 20 அணிக்குள் வந்தார். அதன்பின் சைனி காயம் அடைந்ததால் ஒருநாள் அணிக்குள்ளும் நடராஜன் வந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி மூன்றாவது ஒருநாள் போட்டியில் 2 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.  பின்னர் டி 20 யில் மூன்று போட்டிகளிலும் அசத்தினார்.

இரண்டாவது போட்டி முடிந்ததும் ஆட்ட நாயகன் விருதை வாங்கிய பாண்டியா, “நான் நடராஜனுக்கு தான் ஆட்டநாயகன் விரித்து கிடைக்கும் என நினைத்தேன், அவரது பந்துவீச்சால் தான் நாங்கள் சேஸ் செய்த டார்கெட்டில் 10 ரன்கள் குறைவாக இருந்தது.” என பெருந்தன்மையாக பேசினார்.

நேற்று மூன்றாவது டி 20 யில் இந்தியா தோற்றபொழுதும் தொடர்நாயகன் விருது பாண்டியாவுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் நடராஜனைப் பாராட்டி அவரிடம் தொடர் நாயகனுக்கான கோப்பையை வழங்கி ஹார்திக் பாண்டியா அனைவர் மனதையும் கவர்ந்தார்.

மேலும் ட்விட்டரில் “நடராஜன், இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டீர்கள். ஆஸ்திரேலியா போன்ற கடினமான ஆடுகளத்தில் முதல் தொடரிலேயே உங்களின் கடின உழைப்பும், திறமையும் வெளிப்பட்டது. நீங்கள் தான் தொடர் நாயகன் என்னைப் பொறுத்தவரை சகோதரா. இந்திய டீமுக்கு வாழ்த்துக்கள்” என போட்டோவுடன் பதிவிட்டுள்ளார்.

team india