Sports | விளையாட்டு
வழக்கம்போல் மட்டம் தட்டிய சர்ச்சை வர்ணனையாளர்! விக்கெட் எடுத்து வெற்றியை பரிசாக கொடுத்தார் தமிழக வீரர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று இந்தியா தொடரை இழந்தது.
நேற்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றிபெற்றது. ஆஸ்திரேலியா செல்லும் முன் இந்திய அணியில் தேர்வாகி இருந்த வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு மாற்றாக நடராஜன் டி 20 அணிக்குள் வந்தார். அதன்பின் சைனி காயம் அடைந்ததால் ஒருநாள் அணிக்குள்ளும் நடராஜன் வந்தார்.
மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னர் நடராஜன் தேர்வானது குறித்து மட்டம் தட்டி பேசியுள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். மேலும் அவர் ஐபிஎல் போட்டிகளைப் பார்த்து இன்டர்நேஷனல் அணியை தேர்வு செய்கின்றனர்.
கடைசி ஓவர்களில் மட்டும் சிறப்பாக செயல்படும் நடராஜனை தேர்வு செய்ததை தவறு என குறிப்பிட்டுள்ளார். பவர் பிளேயில் விக்கெட் எடுப்பது தான் முக்கியம்,அதற்கு நடராஜன் சரிப்பட்டு வரமாட்டார் என்பது போல் பேசியுள்ளார் .
ஆனால் இந்திய அணி கடைசி 6 ஒருநாள் போட்டிகளில்
பவர் பிளேயில் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 6வது ஓவரில் முதல் விக்கெட்டை சாய்த்து சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு பதிலடி கொடுத்தார் நடராஜன். இதனை வைத்து ரசிகர்கள் மஞ்சிரேகரரை கலாய்த்து வருகின்றனர்.

Natarajan-cinemapettai
