முதல் மாத சம்பளத்தில் அபராதம் விதித்த பிசிசிஐ.. ஜெயிச்சாலும் இந்திய அணிக்கு இப்படி ஒரு நிலைமையா.?

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான ஒரு நாள், T20, டெஸ்ட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு நாள் சர்வதேச தொடர் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2க்கு 1 என்றவீதத்தில் வெற்றி பெற்று இந்திய அணியை வீழ்த்தியது.

அதன்பிறகு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் போட்டியில் இந்திய அணி 2க்கு 1 என பெற்று வெற்றியை தக்க வைத்தது. இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 தொடர் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது .

முதலில் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி பின்பு சில காரணத்தால் பந்துகள் தாமதமாக வீசத் தொடங்கின. 20 ஓவர் தொடர் போட்டிகளில் பந்து வீசுவதற்கு ஒன்றரை மணி நேரங்கள் மட்டுமே கொடுக்கப்படும். ஆனால் இந்திய அணி ஒன்றரை மணிநேரத்தில் 19 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி உள்ளன. அதன் விளைவாக இந்திய அணி வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்துள்ளது.

கிரிக்கெட் பொருத்தவரை விதிகளை பின்பற்ற வேண்டியது மிக முக்கியம் இல்லை என்றால் பல்வேறு விதமான போட்டிகளில் விளையாட முடியாமல் தடை செய்து விடுவார்கள். அந்தவகையில் பல கிரிக்கெட் வீரர்கள் விளையாட முடியாமல் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆஸ்திரேலிய வீரரும் ஸ்மித் பந்தில்காயத்தை ஏற்படுத்தி வீசியதால் அவ ருக்கு சில மாதங்கள் விளையாட முடியாமல் கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, தவான், கே எல் ராகுல், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் மற்றும் நடராஜன் உட்பட இந்திய வீரர்கள் அனைவருக்கும் முதல் மாத சம்பளத்தில் அபராதத்தை விதித்துள்ளனர். தமிழகத்திலிருந்து சென்ற நடராஜனுக்கு இதுவே முதல் அபராதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இனிமேலாவது இந்திய வீரர்கள் விதிகளை பின்பற்றுவார்களா என்பது அடுத்த போட்டியில் தான் தெரியும்.

team india