நடராஜனின் பயோபிக்கில் தனுஷ்

தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட கிரிக்கெட் மோகம் சற்றே அதிகம் தான். அதுவும் நம்ம ஊரில் இருந்து ஒருவர் வந்துவிடும் பட்சத்தில் அவரை கொண்டாடுவது வாடிக்கை தான். அந்த லிஸ்டில் லேட்டஸ்ட் ஆக இணைந்துள்ளது நடராஜன்.

இடது கை வேகப்பந்து வீச்சளர் நடராஜன். கடினமாக போராடி கிடைத்த வெற்றி. சிறிய ஊரில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்து இவ்வாறு சாதித்தது தான் லைக்ஸ் குவிய காரணம்.

இந்நிலையில் இவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடித்தால் நான்றாக இருக்கும் என நினைத்த ரசிகர்கள், ட்ரைலர் ஒன்றை ரெடி செய்துள்ளனர்.

ஜி வி பிரகாஷ் இசை அமைக்க சூரரை போற்று புகழ் சுதா கொங்கரா இப்படத்தை இயக்க வேண்டும் என்ற தங்கள் ஆசையையும் பதிவிட்டுள்ளார்.