கண் கலங்கிடுச்சு.. கனவு போல இருந்தது, நடராஜனின் எமோஷனலான பேட்டி!

தங்கராசு நடராஜன் இன்று சர்வதேச அளவில் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார். ஆஸ்திரேலிய தொடரை நெட் பௌளராக பயணத்தை ஆரம்பித்து, ஒரே சுற்றுப்பயணத்தில் இடம்பெற்று, ஒருநாள், டி20, டெஸ்ட் என 3 பிரிவுகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தட்டி சென்றுள்ளார்.

இந்தியா திரும்பிய இவருக்கு ஊரில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அதனை பற்றி நட்டு சொல்லியது. “என் வாழ்க்கையில், இதுபோன்ற வரவேற்பை பார்த்ததில்லை. ஊர் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். என் வாழ்க்கையில், மறக்க முடியாத தருணம். நம் சேலத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது கனவு. கடவுள் கொடுத்த வரம். அது, நல்லபடியாக நடந்தது. மிகுந்த மகிழ்ச்சி. ஆஸ்திரேலியா பயணத்தை வரப்பிரசாதமாக நினைக்கிறேன்.”

ஒரு நாள் போட்டியில் அறிமுகமானது பற்றி, “ஒரு நாள் போட்டியில், திடீரென வாய்ப்பு கொடுத்ததை எதிர்பார்க்கவில்லை. அந்த வாய்ப்பை பயன்படுத்துவதில் முனைப்பாக இருந்தேன். என் வேலையை சரியாக செய்ய நினைத்தேன், என் கவனம் மாறியது. அந்த முதல் விக்கெட் அதன் பின்னர் நடந்தது அனைத்தும் கனவு போல தோன்றுகிறது.”

டி20 கோப்பையையே நடராஜனிடம் கோலி கொடுத்ததை பற்றி. “நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், நான் ஓரமாகத் தான் நின்றிருந்தேன். கேப்டன் கோலி கோப்பையை கொடுத்தபோது, கண்கலங்கிவிட்டேன். அவரை போன்ற ஜாம்பவான் வந்து கோப்பையை தந்தது மிகப்பெரிய அனுபவம், அதனை வார்தைகளால் விவரிக்க முடியாது.”

natarajan t

“மகள் பிறந்த பின்பு பார்க்காமல் இருந்தது சற்றே கடினமாக தான் இருந்தது. ஆனால் நான் இந்தியாவிற்கு விளையாடியது எனது குடும்பத்தாருக்கு அதிக சந்தோஷத்தை கொடுத்தது.” என நிருபர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.