Connect with us
Cinemapettai

Cinemapettai

nassar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நாசர்.. சினிமாவில் கஷ்டப்பட்டு சாதித்த சம்பவம்

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பல படங்களில் நடித்துள்ளனர் ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டுமே மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளவர் தான் நாசர்.

ஒருகாலத்தில் கமல்ஹாசனுக்கு இணையாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் தான் நாசர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கமல்ஹாசன் மட்டும் சிவாஜிக்கு சளைத்தவர் இல்லை என்று கூட கூறலாம் அந்த அளவிற்கு எல்லா கதாபாத்திரத்துக்கும் பொருந்தக்கூடிய நடிகர்களுள் நாசரும் ஒருவர்.

ஆனால் சினிமாவில் வருவதற்கு முன்பே ஆரம்பகாலத்தில் ஹோட்டலில் வேலை பார்த்துக்கொண்டே நடிப்புக் கல்லூரியில் படித்துள்ளார். அதன் பிறகு நடிப்பு ஆர்வம் தீராது பற்றிக் கொண்டதால் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு முயற்சி செய்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். ஜீன்ஸ் படத்தில் அண்ணன் நான் எதுக்கும் லாயக்கு இல்லை என கூறுவார் அந்த வசனம் மிகவும் பிரபலமடைந்தது.

nassar

nassar

இவர் கல்யாண அகதிகள் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இவரது 5வது படமான நாயகன் படத்தின் மூலம் தான் இவரது சினிமா வாழ்க்கையே மாறியது என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

அவ்வை சண்முகி, நாயகன், வால்டர் வெற்றிவேல், குருதிப்புனல், சந்திரமுகி, எம்டன் மகன், ஜீன்ஸ் மற்றும் படையப்பா போன்ற பல படங்களில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்த நாசருக்கு சினிமாவில் வந்த பிறகு தான் அனைத்து மொழிகளையும் கற்றுக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் கூட இவரது வில்லத்தனமான நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இந்திய அளவில் பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top