சரத்குமார், ராதாரவி மீது ஐகோர்ட்டில் நாசர் வழக்கு

புதிதாக நியமிக்கப்பட்ட நடிகர் சங்க குழுவினர் மும்முரமாக சில நல்ல விஷயங்களை செய்து வருகின்றனர்.

இதற்கு முன் பொறுப்பில் இருந்த சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் ரூ. 1.65 கோடிக்கு பணம் மோசடி செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு நடிவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நடிகர் சங்க தலைவர் நாசர் சென்னை ஐகோர்ட்டில் இன்று ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக ஏற்கெனவே கமிஷனரிடம் புகார் அளித்தோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட வேண்டும் என்று புகார் மனுவில் கூறியுள்ளார்.

Comments

comments

More Cinema News: