பெங்களூரு: பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் கொல்கத்தா வீரர் சுனில் நரைன், ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து அசத்தினார்.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் பெங்களூருவில் நடக்கும் 46வது லீக் போட்டியில், பெங்களூரு, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற கொல்கத்தா அணி கேப்டன் காம்பிர், முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். கொல்கத்தா அணியில் கிறிஸ் லின் மீண்டும் அணிக்கு திரும்பினார். பெங்களூரு அணியில் வாட்சனுக்கு பதிலாக, டிராவிஸ் ஹெட் சேர்க்கப்பட்டார்.

அதிகம் படித்தவை:  தல தோனியின் காலா டீஸர் வெர்ஷன் ! வைரல் வீடியோ உள்ளே !

இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, நட்சத்திர வீரர்கள் சொதப்ப, பெங்களூரு அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. ஹெர் (75), அரவிந்த் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு, சுனில் நரைன், லின் ஜோடி நம்பமுடியாத அதிரடி துவக்கம் அளித்தது. குறிப்பாக நரைன், பெங்களூரு பவுலர்களை நாலாபுறமும் சிதறடித்தார்.

அதிகம் படித்தவை:  பாலிவுட் நடிகையுடன் ஊர் சுற்றும் கே.எல்.ராகுல். காதலா ? டேட்டிங்கா ? நட்பா ? பரவும் கிசு கிசு !

சிக்சர், பவுண்டரிகளுமாக விளாசித்தள்ளிய நரைன், 15 பந்தில் அரைசதம் அடித்து ஐபிஎல் அரங்கில், அதிவேக அரைசதம் அடித்து அசத்தினார். 17 பந்தில் 54 ரன்கள் (6 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்த நிலையில் நரைன் அவுட்டானார். இதற்கு முன் யூசுப் பதான் 15 பந்தில் அரைசதம் அடித்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் அதிவேக அரைசதத்தை நரைன் சமன் செய்தார்.