வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

43 வயது நடிகையுடன் தொடர்பில் இருந்த நரேஷ்.. 3 வது மனைவி செய்த சம்பவம்

தெலுங்கு சினிமாவில் முன்னாள் கதாநாயகனாக வலம் வந்த கிருஷ்ணாவின் மகன்கள் நரேஷ் மற்றும் மகேஷ் பாபு. இதில் மகேஷ் பாபு பல படங்களில் கதாநாயகனாக நடித்து தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நன்கு பிரபலம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் மகேஷ்பாபுவின் அண்ணன் நரேஷ் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நரேஷ்க்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் குணச்சித்திர நடிகை ஆன பவித்ரா லோகேஷ் என்பவருடன் நரேஷ் தொடர்பில் உள்ளார் என்ற செய்தி வெளியானது.

பவித்ரா லோகேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் 150க்கு மேற்பட்ட படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழ் மொழியில் வெளியான வீட்ல விசேஷம் படத்தில் கதாநாயகி அபர்ணா அம்மாவாக பவித்ரா லோகேஷ் நடித்திருந்தார்.

இந்நிலையில் நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் இருவரும் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி அந்த ஹோட்டலுக்கு வந்து போராட்டம் செய்துள்ளார். அதன்பிறகு ரூமில் இருந்து வெளியே வந்த நரேஷ் மற்றும் பவித்ரா இருவரையும் ரம்யா செருப்பால் அடித்துள்ளார்.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத நரேஷ் விசில் அடித்துக் கொண்டு லிஃப்டில் ஏறி சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நடிகை பவித்ரா இதுகுறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதாவது ரம்யா யார் என்பது எனக்குத் தெரியாது. அவர் யார் எலிசபெத்தா, அரசியல்வாதியா, நடிகையா அவரைப் பற்றி பேச என்னிடம் ஒன்றுமில்லை. நரேஷ்சை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு ஜென்டில்மேன். எனக்கு யாரும் பரிசு கொடுக்கவில்லை. எல்லாமே என் சொந்த சம்பாத்தியத்தில் பெங்களூரில் வாங்கியது என பவித்ரா அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

- Advertisement -

Trending News