Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்த நான்கு நிறுவனங்களால் நரேந்திர மோடிக்கு வந்த தலைவலி.. இவர்களை என்ன பண்ணுவது

modi-coporate

India | இந்தியா

இந்த நான்கு நிறுவனங்களால் நரேந்திர மோடிக்கு வந்த தலைவலி.. இவர்களை என்ன பண்ணுவது

பெரும்பான்மையான பலத்துடன் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் மத்தியில் ஆட்சி புரிந்து வருகிறது. ஆனால் தற்போது பலவிதமான பொருளாதார பிரச்சனைகள் வந்துள்ளன. இதனால் வெற்றியைப் கொண்டாட முடியாமல் நரேந்திர மோடி ஆட்சி தவித்து வருகின்றனர்.

லேமென் – ஐ.எல்.எஃப்.எஸ்

லேமென் – ஐ.எல்.எஃப்.எஸ் நிறுவனம் அதிக கடன்களை பெற்று தற்போது தவித்து வருகிறது. இந்த நிறுவனம் ரூபாய் 90,000 கோடிக்கும் மேல் கடனாக பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் பலரும் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து புதிய நிர்வாக குழுவினை அரசாங்கம் அமைத்தது.

ஆனால் இந்த விவகாரம் இன்றைக்கு முழுமையாகத் தீர்க்க முடியவில்லை மேலும் இந்த நிறுவனத்திற்காக ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பொதுத்துறை வங்கிகளின் கடன் உதவி ஆகியவற்றால் சற்று தடுமாற்றத்தில் இருந்து எழுந்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த விமானங்களில் ஒன்று. ஆனால்ஜெட் ஏர்வேஸ் தொடர் நஷ்டம் காரணமாக, எரிபொருள் விலை உயர்வு காரணமாக தற்போது சரிவை சந்தித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உள்நாட்டு விமான பயண கட்டணம் அதிகரித்துள்ளதால் பல பயணிகளும் அதில் பயணம் செய்யாமல் வேறு ஒரு விமானத்தில் பயணம் செய்து வரும் நிலைக்கு வந்துள்ளனர்.

இதனால் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் நிலை வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த நிறுவனம் கடனாக பெற்ற தொகை 14,000 ஆயிரம் கோடி ஆனால் 5,500 கோடி தற்போது கட்டினால் மட்டுமே இந்த நிறுவனத்தை தொடர முடியும் என தெரிவித்துள்ளனர்.

ரிலையன்ஸ் இன்ஃப்ரா

அனில் அம்பானி குழும நிறுவனங்களின் பல்வேறு நெருக்கடியால் தற்போது பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எரிக்ஸன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அனில் அம்பானி சிறைக்குச் செல்வதை தடுப்பதற்காக அவரது அண்ணனான முகேஷ் அம்பானி 550 கோடி செலுத்தி தம்பியை காப்பாற்றினார்.

முகேஷ் அம்பானியின் ஜியோ போன்ற திட்டங்கள் மூலம் கொடிகட்டி பறந்து வருகிறார். ஆனால் அனில் அம்பானி தற்போது தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறார் என பலரும் கூறுகின்றனர்.

என்.பி.எஃப்.சி சிக்கலில் டி.ஹெச்.எஃப்.எல்

என்.பி.எஃப்.சி சிக்கலில் டி.ஹெச்.எஃப்.எல் பல சிக்கல்களை சந்தித்து வரும் இந்த நிறுவனம் சென்ற மாதத்தில் புதிய டெபாசிட்டுகளை பெறுவதில்லை என்றும் ஏற்கனவே கெப்பாசிட்டி செய்தவர்களுக்கு திரும்பதர இயலாது என்றும் தெரிவித்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. திவான் ஹவுஸிங் நிறுவனம் ரூ.31,000 கோடி அளவிற்கு பொதுமக்களின் பணத்தை மோசடி செய்ததாக கோப்ரா போஸ்ட் புலனாய்வு இதழ் வெளியிட்டிருந்தது.

மேலும் மத்தியில் ஆளும் கட்சிகள் நன்கொடை என்ற பெயரில் சட்ட விதிமுறைகளை மீறி பெருமளவு தொகையை வாத்வா குடும்பத்தினருக்கு கொடுத்து அதன் மூலமாக நன்கொடைகளைப் பெற்றதாக கோப்ரா போஸ்ட் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே வேலை இல்லாமல் பலரும் தவிர்த்து வருகின்றனர். மேலும் ஜிஎஸ்டி போன்ற பல திட்டங்கள் மூலம் பொருளாதாரப் பிரச்சினையை ரியல் எஸ்டேட் சந்தித்து வருகிறது. வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தளர்ச்சி மற்றொரு பேரிடியாக அமைந்துள்ளது. நரேந்திர மோடி ஆட்சி என்ன செய்யப் போகிறது

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top