இது தொடர்பாக, இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று லோக்சபாவிற்கு தேர்தல் நடந்தால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 360 இடங்கள் கிடைக்கும். பா.ஜ.,வுக்கு மட்டும் 305 இடங்கள் கிடைக்கும். சிறந்த பிரதமராக மோடி உள்ளதாக 65 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த கருத்துக்கணிப்பு ஒன்றில் கிடைத்த முடிவை விட 15 சதவீதம் அதிகமாகும். ஆனால், ராகுலுக்கு 10 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் கறுப்பு பணத்தை ஒழிக்கும் என 45 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 35 சதவீதம் பேர் பொருளாதாரத்திற்கு உதவும் எனக்கூறியுள்ளனர். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை 80 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், இந்த திட்டத்தை நன்கு திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.