Connect with us

Cinemapettai

மோடிக்கு ஆப்பு.. தேர்தல் கமிஷன் எடுத்த முடிவிற்கு குவியும் பாராட்டுக்கள்

Narendra-Modi-biopic-movie

Cinema News | சினிமா செய்திகள்

மோடிக்கு ஆப்பு.. தேர்தல் கமிஷன் எடுத்த முடிவிற்கு குவியும் பாராட்டுக்கள்

விவேக் ஓபராய் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் நரேந்திர மோடி. இப்படத்தில் விவேக் ஓபராய் நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Modi: விவேக் ஓபராய் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் நரேந்திர மோடி. இப்படத்தில் விவேக் ஓபராய் நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் ஏப்ரல் 11ம் தேதி வெளியாக படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இப்படம் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் இப்படத்தை வெளியிட தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் ஆனால் அதற்கு சுப்ரீம் கோர்ட் படத்தை தடை விதிக்க முடியாது என்றும் இதற்கு தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறி மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

ஆனால் தேர்தல் கமிஷனரிடம் எதிர்க்கட்சிகள் இந்த திரைப்படத்தை தேர்தல் நேரத்தில் திரையிடக்கூடாது என கூறியதால் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என தேர்தல் கமிஷன் தடைவிதித்துள்ளது.

அதற்கு காரணம் இது போன்ற திரைப்படங்கள் வெளி வந்தால் வாக்காளர்களின் மனநிலையை தாக்கத்தை ஏற்படுத்தி வாக்களிக்க நேரிடும் என்பதால் இப்படத்தை தடை விதித்ததாக கூறியுள்ளனர்.

மேலும் தேர்தல் முடியும் வரை வாழ்க்கை வரலாறு படமோ அல்லது வரலாற்று படங்கள் வெளியிடக் கூடாது என உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் கமிஷன் எடுத்த இந்த நடவடிக்கைக்கு இந்தியா மீது பற்றுள்ள அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top