அஜித்திற்கு அழைப்பு விடுத்தாரா பிரதமர் மோடி ? இணையதளத்தை சுற்றி வரும் வதந்தி

ajith-modiபிஜேபி தமிழகத்தில் தங்கள் கட்சியின் செல்வாக்கை உயர்த்த, திரை பிரபலங்களை தங்கள் கட்சிக்கு இழுப்பது தான் ஒரே வழி என பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளாராம் .

அந்தவகையில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை ஏற்கனவே ஒருமுறை தங்கள் கட்சிக்குள் இழுக்க முயன்றது பிஜேபி. ஆனால் அது தோல்வியில் முடிய, தற்போது ‘தல’ அஜித்தை தங்கள் கட்சியில் சேரும்படி அழைப்பு விடுத்துள்ளதாம் பிஜேபி.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை ‘தல’ அஜித் விரைவில் சந்திக்கப் போவதாகவும் அச்சந்திப்புக்கு பிறகு அரசியலில் நுழைவது குறித்த முடிவை அஜித் எடுப்பார் எனவும் தகவல் வெளியாகி இணையதளத்தில் சுற்றி வருகிறது . இந்த வதந்திக்கு விரைவில் அஜித் தரப்பில் இருந்து பதில் எதிர்பார்க்கபடுகிறது

Comments

comments