Tamil Cinema News | சினிமா செய்திகள்
டிஸ்கவரி சானல் Man Vs Wild பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி. டீஸர் வீடியோ. நிகழ்ச்சி எப்போ ஒளிபரப்பாகிறது தெரியுமா?
பிரிட்டனை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் பியர் கிரில்ஸ் ராணுவத்தின் சிறப்பு அதிரடி படையில் விமானப் பிரிவில் பணியாற்றிவர். தற்பொழுது டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியின் வாயிலாக தான் இவர் உலகம் முழுவதும் பிரபலம்.
மனிதர்கள் அதிகம் பயணிக்காத இடங்களான மலைப்பகுதிகள், அடர்ந்த காடுகள், பாலைவனம் , பனிப் பிரதேசம், எரிமலைக்கு மிக அருகில் என தொலைக்காட்சி குழுவினருடன் இறக்கி விடப்படுவார் பியர் கிரில்ஸ், பல கிலோ மீட்டர்கள் அந்தக் கடுமையான சூழ்நிலைகளில் பயணித்து, அங்கு கிடைக்கும் இயற்கையான காய், கனி, மாமிச உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உயிர் பிழைத்து, மனிதர்கள் வாழும் பகுதிக்கு எப்படி தப்பித்து வருவார் என்பதே ப்ரோக்ராம். பியர் கிரில்ஸ், தண்ணீர், உணவு என எதையுமே எடுத்து செல்ல மாட்டார்.

bear grylls narendra modi
சமீபத்தில் தன் ட்விட்டர் பக்கத்தில் மனிதர் ஸ்டேட்டஸ் மட்டும் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
“180 நாடுகளை சேர்ந்த மக்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தெரியாத பக்கங்களை பார்க்கமுடியும், சுற்றுச் சூழல் மாற்றம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே அவர் இந்தியாவின் வனப்பகுதிகளில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் 12, 9 மணிக்கு இதனை டிஸ்கவரியில் பார்க்கலாம்.”
தன்னை தானே விளமபரப்படுத்திக்கொள்வதில் மோடியை விட சிறந்த வித்தகர் கிடையாது என்றால் அது மிகையாகாது. எனினும் மறுபுறம் சுற்றுலாத்துறை வளரவும் இதில் வாய்ப்புள்ளது.
