பாலிவுட்டில் தோனி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த வகையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது.

மோடியாக பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான பரேஷ் ராவல் நடிக்கிறார். பரேஷ் ராவல் பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மிடுக்கான தோற்றமும், இயல்பாகவே நகைச்சுவை குணமும் கொண்ட ராவல் மோடியின் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  படுக்கையறை காட்சி வீடியோ லீக்.!அதிர்ச்சியில் ராய் லட்சுமி.!பரபரப்பு தகவல்.!

இது குறித்து செய்தியாளர்கள், அவரிடம் கேட்டபோது தொடர்ந்து மவுனம் காத்து வந்த ராவல் தற்போது அந்த தகவல் உண்மைதான் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் நரேந்திரமோடி மீண்டும் ஒரு வரலாறு படைப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.