அறிமுக இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் துருவங்கள் பதினாறு என்னும் த்ரில்லர் படம் தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு த்ரில்லர் கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் கார்த்திக். இந்த படத்திற்கு நரகாசுரன் என்று பெயர் வைத்துள்ளார். இந்த படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சுந்தீப் கிஷான், இந்ரஞ்சித் போன்றோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் கதையை கேட்ட கௌதம் வாசுதேவ மேனன் கதை பிடித்துப் போய் படத்தை தானே தயாரிக்கிறேன் என்று களமிறங்கிவிட்டார்.

 

செப் 16 அன்று இதன் படப்பிடிப்பு துவங்கியது. ஒரே மாதத்தில் இந்த படத்தின் அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாம். அதனால் அக்டோபர் இதன் படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிடும். அநேகமாக போஸ்ட் ப்ரோடக்சன் வேலைகள் முடிந்து படம் டிசம்பரில் கிறிஸ்துமஸ் அன்று திரைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.