யூ டர்ன்

கன்னடத்தில் 2016-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் ‘யூ டர்ன்’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட ஹாரர் – த்ரில்லர் ஜானர் படம். இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். கன்னடத்தில் ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய பவன் குமாரே இதனை இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் ரெடியாகிறது.

PK

இப்படத்தில் ஆதி , ராகுல் ரவீந்திரன், பூமிகா (பேய் கதாபாத்திரம்) முக்கிய ரோலில் நடிக்கிறார்கள் என்று முன்பே நம் தளத்தில் சொல்லி இருந்தோம். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ‘அஞ்சாதே’ பட புகழ் நரேன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Narain

மேலும் ஸ்ட்ரியிக் முடிந்ததும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பற்றிய தகவல்கள் வெளியாகும்.