துருவங்கள் 16 படத்தின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் கார்த்திக் நரேன். இவரின் அடுத்த படம் நரகாசூரன். பத்ரி கஸ்தூரி, கவுதம் மேனன் இப்படத்தினை தயாரிக்கிறார்கள்.

Naragasooran

அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஷரியா சரண், ஆத்மிக்கா ஆகியோர் நடிப்பில் வெளிவரும் இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் வகையறா. இப்படத்தில் பாடல்கள் எதுவும் கிடையாது. இந்த படத்தின், முதல் லுக் போஸ்டர், டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Naragasooran

முழுக்க முழுக்க ஊட்டியில் படமாக்கப் பட்ட இப்படத்தின் ஷூட்டிங்கை 41 நாட்களில் முடித்து தயாரிப்பாளர்களை ஆச்சர்யப்பட வைத்தார் இயக்குனர். ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகுகிறது இப்படம்.

அதிகம் படித்தவை:  மீண்டும் ஹீரோ அவதாரம் எடுக்கும் ஜித்தன் ரமேஷ். பட தலைப்பு, மோஷன் போஸ்டர் உள்ளே !
Naragasooran Team

‘மாயா’ பட புகழ் ரான் இதன் யோஹான் இசையமைக்கிறார்.

Ron Ethan Yohann

தற்பொழுது , படத்திற்கான பின்னணி இசையமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாசிடோனியா நகரத்தில் சிம்பொனி இசைக்குழுவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் ரான் யோஹன்.

அதிகம் படித்தவை:  பிரபல மாடல் அழகி மரணம்! குடிபோதையில் பிரபல நடிகர் செய்தது அம்பலம்
Ron Ethan Yohann

இதன் போட்டோக்களை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர்.

Naragasooran Music Composing
Naragasooran Music Composing
Naragasooran Music Composing

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெறுகிறது. நடைபெற்று வருகிறது. விரைவில் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும் என் எதிர்பார்க்க படுகிறது.