டிக் டிக் டிக் ட்ரைலர்

ஜெயம் ரவி – சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணியில் உருவான ’மிருதன்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் டிக் டிக் டிக். மிருதன்  முதல் தமிழ் ‘ஜோம்பி’ படம் என்றால்; இப்படம் முதல் தமிழ் ’ஸ்பேஸ் – திரில்லர்’ படமாக வெளியாகவிருக்கிறது.

டி.இமான் இசையமைக்க, ஜெயம் ரவி, நிவேதா பெதுராஜ், அர்ஜுனன், ரமேஷ் திலக், வின்செண்ட் அசோகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஏற்கனவே டீசர் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது படத்தின் ட்ரைலரை வரும் 24 – ஆம் தேதியன்று வெளியிடவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குனர்.

சமீபத்தில்இப்படத்தை ‘தேனாண்டாள் நிறுவனம்’ வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இப்பொழுது இப்படத்தை தயாரிப்பாளர் நேமிச்சந்த் ஜபக் வெளியிடுகிறார் என்ற அறிவிப்பு வந்துள்ளது .

 

நரகாசூரன் டீஸர்

 

துருவங்கள் 16  படத்தின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் கார்த்திக் நரேன். இவர் தன் அடுத்த படத்திற்கு நரகாசூரன் என்று பெயர் வைத்ததும், அதை கவுதம் மேனன் சேர்ந்து தயாரிப்பது நாம் அறிந்ததே

Naragasooran Team’s First Day Shoot In Ooty.

செப்டம்பர் 16 ஊட்டியில் படத்தின் ஷூட்டிங்கை அரமபித்தார்.அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஷரியா சரண், ஆத்மிக்கா நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி மலையாளத்திலும் வெளியிடப் போகிறார்கள். இதுவும் சஸ்பென்ஸ் திரில்லர் வகையறா படம் தான். இப்படத்தில் பாடல்கள் எதுவும் கிடையாது.

படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி 45 நாட்களை விட குறைவாக 41 நாட்களில் முடித்து, இப்படத்தின் தயாரிப்பாளரான கௌதம் வாசு தேவனை ஆச்சர்யப்படுத்தினார். அதே வேகத்தில் கார்த்திக் நரேன் இப்படத்தின் டீஸர் வெளியீட்டு தேதியையும் குறித்து விட்டார். வருகிற 25-ஆம் தேதிநரகாசூரன்டீஸர் வெளியாகும் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.