இயக்குனர் கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு என்ற வெற்றி படத்தை கொடுத்து முக்கிய இயக்குனர் லிஸ்டில் சேர்ந்துவிட்டார், இந்த படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார், இவர் தற்பொழுது அரவிந்த் சாமி நடிக்கும் நரகாசூரன் படத்தை இயக்கிவருகிறார்.

Naragasooran
Naragasooran

அரவிந்த் சாமியும் தனி ஒருவன் படத்தில் நடித்ததில் இருந்து மிகவும் பிஸியாகிவிட்டார், தற்பொழுது பல படங்களை கையில் வைத்துள்ளார், இவர் நடிக்கும் நரகாசூரன் படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் நடிக்கிறார், மேலும் படத்தில் மலையாள நடிகர் இந்திராஜ் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார், மாநகரம் சந்தீப் கிஷன், மீசைய முறுக்கு ஆத்மிகா, என பல நட்ச்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளார்கள்.

படத்தை ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரிக்கிறார். மேலும் படம் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் தயாராகி வருகிறது.

படத்திற்கு ரான் யோஹான் இசையமைக்கிறார் இவர் இதற்க்கு முன் மாயா படத்திற்கு இசையமைத்துள்ளார், இதற்க்கு சுஜித் ஒளிபதிவு செய்துள்ளார், சாரங் படத்திற்கு தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களிடம் அமோக வரவேற்ப்பை பெற்றார்கள், மேலும் படத்தின்மீது எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டம் போட்டுள்ளார்கள் இதை படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை தட்டியுள்ளார் இதோ பதிவு.