வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ஜப்பானில் நெப்போலியன் மகன் திருமணம், குவிந்த சினிமா பிரபலங்கள்.. ஒரு நைட்டுக்கே இவ்ளோ வாடகையா?

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம் நாளை ஜப்பானில் நடக்கவுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகர், நடிகைகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஜப்பானுக்கு சென்றுள்ளனர். இவர்களை சிறப்பான வரவேற்று ஓட்டலில் பல ஆயிரம் செலவில் ரூம் புக் செய்துள்ளாராம் நெப்போலியன்.

90 களில் வில்லனாக அறிமுகமாகி, குணச்சித்திர வேடங்களில் நடித்து முன்னணி நடிகராக ஜொலித்தவர் நெப்போலியன். இவர் சில ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் இருந்து விலகி அரசியல்வாதியாக இருந்தவர், அதன்பின், அமெரிக்காவுக்கு சென்று தொழிலதிபரானார். சினிமாவில் இருந்து வேறு துறைகளுக்குச் சென்றாலும் திறமையிருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக நெப்போலியன் திகழ்கிறார்.

இந்த நிலையில் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வீல் சேரில் அமந்தபடி இருக்கிறார்.அங்கு அவருக்கு மருத்துவம் பார்த்துவருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு திருமணம் நடக்காது எனப் பலரும் கூறிய நிலையில், விடாமுயற்சியுடன் மகனுக்குப் பெண் தேடி வந்தார் நெப்போலியன்.

ஜப்பானில் நெப்போலியன் மகன் கல்யாணம்

அதன்பின், அக்‌ஷயா என்பவர் வீட்டில் பேசி அவரிடமும் சம்மதம் பெற்று வீடியோ கால் மூலம் நிச்சயமும் நடைபெற்றது. இதுகுறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் தனுஷ் வீடியோ வெளியிட்டு தனக்கும் மற்றவர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டுவதுபோல் அதில் பேசியிருந்தார். இந்த நிலையில் தனுஷ்- அக்‌ஷயா திருமணம் நாளை ஜப்பானில் பிரமாண்டமாக நடக்கிறது.

இதையொட்டி, சினிமா பிரபலங்களான குஷ்பு, கலா, ராதிகா, பாண்டியராஜன், சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஜப்பானுக்கு சென்றுள்ளனர். இவர்களை விமான நிலையத்திற்கு நேரில் வந்து வரவேற்றார் நெப்போலியன். நீண்ட தூரம் பயணித்து மகனின் திருமணத்திற்கு வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் தலைநகர் டோக்கியோ சிட்டியில் அமைந்திருக்கும் ஹில்டன் ஓட்டலில் அறை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

ஒரு இரவுக்கான ரூம் வாடகை இவ்வளவா?

அந்த ஓட்டலில் ஒரு இரவுக்கான ரூம் வாடகை மட்டும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எனவும், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், நண்பர்கள் என பலருக்கும் பல அறைகளை அவர் முன் கூட்டியே புக் செய்திருப்பதாகவும், இந்த அறையில் ஏசி உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ள சொகுசு அறை என்பதால் இதற்கு மட்டும் பல லட்சங்கள் செலவாகியிருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், இந்த அறையில், மாஸ்டர் பெட் ரூம், சிட்டியே தெரியும் படி உள்ள பாலகனி, மேக்கப் கிட்டுகள் வைக்க ஒரு மேசை, இந்த அறைக்குள் இன்னொரு அறை,ஓட்டலுக்கு அருகில் ஷாப்பில் செய்ய பிரபல ஷோரூம்கள், உணவகம் என சகல வசதிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இத்திருமணத்தை பிரபல தனியார் யூடியூப் சேனல்தான் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News