ஹாலிவுட் படத்தில் மாவீரன் நெப்போலியன். ட்ரைலர் உள்ளே.

முறுக்கு மீசை, மடித்து கட்டிய வேஷ்டி, வீச்சருவா என்று நமக்கு பழக்கப்பட்டவர் நெப்போலியன்.

இவர் இயற்பெயர் குமரேசன் துரைசாமி. தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து; படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டவர். இவரின் பெயரை மாற்றியதும் அவரே. பின்னர் படிப்படியாக வில்லன் கதாபத்திரத்தில் இருந்து கதாநாயகனாக மாறி பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் நெப்போலியன். அரசியலில் நுழைந்த பின் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார். ஒருபுறம் அரசியல், மறுபுறம் நடிப்பு, பிசினஸ் என்று மனிதர் செம்ம பிஸி.

இந்நிலையில் தற்பொழுது நெப்போலியன் முதன்முறையாக ‘டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்’(Devils Night:Dawn Of The Nain Rouge) என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். அமெரிக்காவில் தொழிலதிபராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டெல் கணேசன், கைபா ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படம். சாம் லோகன் காலேகி என்பவர் தான் இப்படத்தின் இயக்குனர்.

இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது..

“இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கணேஷ் என் சொந்த ஊரான திருச்சியைச் சேர்ந்தவர். எனக்கு பத்து வருடங்களாக அவருடன் நட்பு உண்டு. ஒரு நாள் அவர் என்னிடம் தான்; ஒரு ஆங்கிலப்படத்தினை தயாரிக்கப் போவதாகக் கூறினார். அவருக்கு நான் வாழ்த்துத் தெரிவித்த பொழுதுதான், நானும் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். எனக்கு ஆங்கிலம் சரியாக பேச வராது என்று கூறியும் அவர் வற்புறுத்தி நான் தான் நடிக்க வேண்டும் என்றார். அத்துடன் நான் ஓய்வாக இருக்கும் பொழுது படப்பிடிப்பினை வைத்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.


உண்மைச் சம்பவங்களை அடிப்படையில் கொண்ட அமானுஷ்ய த்ரில்லராக இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு உள்ளூரில் சொல்லப்படும் செவி வழிக்கதை ஒன்றையும் சேர்த்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அருங்காட்சிய காப்பாளர் வேடத்தில் நான் நடிக்கிறேன். எனக்கான காட்சிகளின் பெரும்பகுதியினை கடந்த அக்டோபர் மாதத்திலேயே முடித்து விட்டேன். இந்தப்படத்தினை தமிழில் ரிலீஸ் செய்யவும் திட்டம் இருக்கிறது. எனது ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். சில மாறுதல்கள் செய்து தமிழில் ரிலீஸ் செய்வோம்.
இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது.


தமிழ் பின்னணிப் பாடகரான தேவன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். அத்துடன் இது நான் நடிக்கும் முதலாவது; லைவ் சவுண்ட் படமாகும்.” என்று கூறியுள்ளார்.

இப்படத்தின் முதல் ட்ரைலர் வெளியாகி நல்ல ரீச் ஆகியுள்ளது.

Comments

comments