fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சைக்கோ நானியின் ஆடு புலி ஆட்டம்.. இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ‘V’ திரைவிமர்சனம்

nani-v-movie

Reviews | விமர்சனங்கள்

சைக்கோ நானியின் ஆடு புலி ஆட்டம்.. இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ‘V’ திரைவிமர்சனம்

நடிகர் நானியின் 25 வது படமே V . இப்படத்தில் நெகட்டிவ் கலந்த ஷேடில் நடித்துள்ளார்.

மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் நானியுடன், சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ், வெண்ணிலா கிஷோர், தலைவாசல் விஜய், ரோகினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

கதை – மதக்கலவரத்தை அடக்கும் சுதீர் பாபு என்கிற சூப்பர் போலீஸ் பற்றிய அறிமுகத்துடன் தொடர்கிறது படம். பல மெடல்களை குவிக்கிறார் அவர். குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனமாக உள்ளார் அவர். கூடவே நிவேதா தாமஸுடன் காதல். அவருக்குச் ஓபன் சாலஞ் விடுத்து கொலை செய்யத் தொடங்குகிறார் நானி. க்ளூவையும் விட்டுவிட்டுப் போகிறார். அடுத்தடுத்த மரணம் சேசிங் என சூப்பர் ஆக செல்கிறது முதல் பாதி.

சுதீர் மற்றும் நானி ஒரு ஸ்கூலில் படித்தவர்கள் என போட்டோ அனுப்புகிறார் நானி. இரண்டாவது பாதியில் ராணுவ அதிகாரியாக நானி, அதிதி ராவுடன் காதல் வயப்படுவது என பிளாஷ் பேக் காட்சிகள் வருகிறது.

ஐந்து நபர்கள் தான் டார்கெட். அவர்கள் செய்தது கற்பழித்து அபலை பெண்ணை கொன்றது என்பது தெரிய வருகிறது சுதீர் பாபுவுக்கு. எனினும் நானியின் காதலி அதிதி இதில் எப்படி சம்பந்தம் ஆனார் என்ற விஷயத்தை கடைசியில் வைத்துள்ளார் இயக்குனர்.

சினிமாபேட்டை அலசல் – வழக்கமான பழி வாங்கும் திரில்லர் ஜானர் படம் தான் இது. நாம் எளிதில் ஊகிக்க கூடிய திரைக்கதை பெரிய மைனஸ். வில்லத்தனம் மற்றும் மிலிட்டரி ஆஃபீசர் என நானியின் தோற்றம் சற்றே நெருடலாகவே உள்ளது. எனினும் அதனை தனது வசனம் டெலிவரி வாயிலாக சரி செய்து விடுகிறார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான படம், ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றத்தையே தருகிறது. எனினும் கமெர்ஷியல் சினிமா ரசிகர்களுக்கு நல்ல டைம் பாஸ் இப்படம்.

சினிமாபேட்டை ரேட்டிங் 2.5 out of 5

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top