Saripodhaa Sanivaaram Movie Review – தியேட்டரில் பட்டையை கிளப்பிய நானி, எஸ்ஜே சூர்யா கூட்டணி.. சரிபோதா சனிவாரம் எப்படி இருக்கு?

Saripodhaa Sanivaaram : இன்றைய தினம் நானி மற்றும் எஸ்ஜே சூர்யா கூட்டணியில் சரிபோதா சனிவாரம் என்ற படம் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தை விவேக் ஆதிரேயா இயக்கி இருக்கிறார். ஆக்சன் கலந்த அதிரடி படமாக இப்படம் உருவாகி இருக்கிறது.

கதையில் சூர்யாவாக நடித்திருக்கும் நானி தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாத ஒரு ஆளாக இருக்கிறார். அவரின் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதால் அவரது அம்மா வாரம் 6 நாட்கள் யாரையும் அடிக்க கூடாது, சனிக்கிழமை மட்டும் உன் கோபத்தை வெளிப்படுத்திக் கொள் என்று சத்தியம் வாங்குகிறார்.

இதனால் வாரம் 6 நாட்கள் என்ன தான் பிரச்சனை நடந்தாலும் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும் நானி, அவற்றையெல்லாம் எழுதி வைத்துக்கொண்டு சனிக்கிழமை எல்லோரையும் அடித்து தும்சம் செய்கிறார்.

சரிபோதா சனிவாரம் விமர்சனம்

இந்த சூழலில் தான் கதாநாயகி பிரியங்கா மோகன் உடனான நட்பு நானிக்கு கிடைக்கிறது. மேலும் படத்தின் வில்லனான எஸ்ஜே சூர்யா இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். தனது சொந்த ஊரில் உள்ள மக்களை கொடுமைப்படுத்தி வருகிறார் எஸ்ஜே சூர்யா.

அந்த ஊர் மக்களை எஸ்ஜே சூர்யாவிடம் இருந்து எப்படி நானி காப்பாற்றுகிறார் என்பது தான் சரிபோதா சனிவாரம் படத்தின் கதை. படத்தில் நானி மற்றும் எஸ்ஜே சூர்யா காம்போ ரசிகர்களிடம் கைதட்டலை பெற்றது. ஹீரோவை காட்டிலும் வில்லன் எஸ்ஜே சூர்யா தான் ஸ்கோர் செய்திருக்கிறார்.

தொடர்ந்து ஒரே மாதிரியான வில்லன் கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடித்து வந்தாலும் தியேட்டரில் அவர் வந்தாலே கைத்தட்டல் பறக்கிறது. படத்தில் நெகட்டிவ் முதல் பாதியில் தொய்வு இருந்தது. சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அவை பெரிய அளவில் மைனஸாக அமையவில்லை.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.75/5

Next Story

- Advertisement -