Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல நடிகரின் 25வது படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? சந்தோஷப்படுறதா, சோகப்படுறதா குழப்பத்தில் ரசிகர்கள்
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி தெலுங்கில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்துள்ளவர். தமிழிலும் நமக்கு வெப்பம், நான் ஈ போன்ற படங்களின் வாயிலாக பரிச்சயம் தான்.
கமெர்ஷியல் கலந்த அதே நேரத்தில் சற்றே வித்யாசமான கதைக்களம் அல்லது கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதில் வித்தகர் நானி.
இவரின் 25 வது படமே V . கடந்த மார்ச் மாதமே வெளியாக இருந்தது. அதன் வெளியீட்டில் மாறுதல் ஏற்பட்டது. இப்படத்தில் நானி “டக் ஜெகதீஷ்” என்ற நெகட்டிவ் கலந்த ஷேடில் நடித்துள்ளார். மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் நானியுடன் சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

V ON AMAZON PRIME
சமீபத்தில் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி V படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது உறுதியானது.

nani
கடந்த 12 ஆண்டுகளாக எனது படங்களைக் காண டிக்கெட்கள் எடுத்து திரையரங்கிற்கு வந்தீர்கள். இப்போது நான் உங்களுடைய வீட்டிற்கே வந்து நன்றி கூறவுள்ளேன். என கூறியுள்ளார் நானி. மேலும் திரை அரங்குகள் திறக்கப்படும் படம் அதிலும் திரையிடப்படும் என சொல்லியுள்ளார்.
