‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்து வரும் படம் ‘கிருஷ்ணார்ஜுனா யுத்தம்’. மெர்லபாக காந்தி இயக்கி வரும் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

Nani

ஒருவர் கிராமத்து வாலிபராக. மற்றவர் மாடர்ன் ராக்ஸ்டார் பாடகராக என்று இரு வேறு கதாபாத்திர அமைப்பில் திரைக்கதை உள்ளது. அனுப்பமா பரமேஸ்வரன், ருக்ஷயா மிர் இருவரும் ஹீரோயினாக்களாக நடிக்கின்றனர். ஹிப் ஹாப் ஆதி இசை. ‘ஷைன் ஸ்க்ரீன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் டீசரை நானி வெளியிட்டார். படத்தை வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.