fbpx
Connect with us

அக்ஷரா” டீஸர் – கையில் புக், அதன் உள்ளே கத்தி ! கல்லூரி பேராசிரியையாக நந்திதா ஸ்வேதா

Videos | வீடியோக்கள்

அக்ஷரா” டீஸர் – கையில் புக், அதன் உள்ளே கத்தி ! கல்லூரி பேராசிரியையாக நந்திதா ஸ்வேதா

நந்திதா ஸ்வேதா அட்டகத்தி, எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். தமிழில் தேவி 2 , நர்மதா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

அக்ஷரா

தெலுங்கில் இவர் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை சில மணி நேரம் முன்பு நடந்தது. சின்னி கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார். சுரேஷ் பொபிலி இசை. எடிட்டிங் சத்தியா கிடுதுரி, இப்படத்தை சினிமா ஹால் நிறுவனம் தயாரிக்கிறது.

இன்று கல்வி மிக பெரிய பிஸ்னஸ் ஆகியுள்ள நிலையில், அதில் நடக்கும் முறைகேடுகள், மாணவர்களுக்கு ஏற்படும் கொடுமைகள் என இப்படம் காட்டவுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ரெடியாகி உள்ள இப்படத்தின் கான்சப்ட் டீசரும் வெளியாகி உள்ளது.

நந்திதாவிற்கு தமிழிலும் நல்ல மார்க்கெட் உள்ளதால், தமிழ் டப்பிங் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. எனினும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top