Tamil Cinema News | சினிமா செய்திகள்
நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி பாணியில் நந்திதா ஸ்வேதாவின் புதிய படம் !
சில ஆண்டுகளுக்கு முன்புவரை கதாநாயகியை மயப்படுத்தி வரும் படங்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்துவந்தது. அத்திபூத்தாப்போல ஒரு சில படங்கள் தான் வெளியாகின. அதிலும் வசூல் வேட்டை நிகழ்த்திய படங்களும் குறைவு தான். விஜயசாந்தி, மற்றும் வேறு சில நடிகைகளின் அம்மன் அல்லது பாம்பு வேதா படங்களே பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நிகழ்த்தின.
தற்பொழுது உள்ள சூழலில் நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி போன்றவர்கள் கொடு போட்டு கொடுக்க இன்று திரிஷா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் என்று அதில் ரோடு போட்டு வெற்றி கண்டுள்ளனர்.
அந்த வரிசையில் தான் அட்டகத்தி, எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களில் நடித்த நந்திதாவும் இணைந்துள்ளார்.
நர்மதா
இப்படத்தில் நந்திதா 7 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்கவுள்ளாராம். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை அம்சம் உள்ள படம். அறிமுக இயக்குனர் கீதா ராஜ்புத் என்பவர் இயக்குகிறார். இவர் பாலாவிடம் அசிஸ்டன்ட் ஆக பணிபுரிந்தவராம். ஜி ஆர் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சதிஷ் சரண் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார்.

Narmadha Movie Pooja
இப்படத்தின் பூஜை நேற்று நாகர்கோவிலில் நடந்தது. விஜய் வசந்த், எம்.எஸ்.பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், மாஸ்டர் ரெனேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
