Tamil Cinema News | சினிமா செய்திகள்
இனிதே நடந்த நிச்சயதார்த்தம்.. ஆஸ்திரேலியத் தொழிலதிபரை மணக்கிறார் ‘நந்தினி’ நித்யா ராம்! புகைப்படம்
‘நந்தினி’ சீரியல் புகழ் நித்யா ராமுக்கும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதமுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
‘மொட்டு மனசே’ என்ற கன்னடப் படத்தில் அறிமுகம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் நித்யா ராம். அதன்பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் 2017-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அவள்’ சீரியல் நித்யா ராம் அறிமுகமானார். அதன் பின்னர் பல மொழிகளின் சீரியல்களில் நடித்தார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நந்தினி’ சீரியலில் நடித்தன் மூலம் நித்யா ராம் மிகவும் பிரபலம் ஆனார். இந்நிலையில் நித்யா ராமுக்கும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதமுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கவுதமைத் திருமணம் செய்துகொண்டு ஆஸ்திரேலியாவில் குடியேற உள்ளாராம்.
பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது- முன்னதாக, 2014-ம் ஆண்டு வினோத் என்பவரைத் திருமணம் செய்த நித்யா ராம் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகாரத்து பெற்றார்.

nandhini

nandhini
