Connect with us

Cinemapettai

பிணையில் வந்த நந்தினி திருமணம் முடிந்தது.. புகைப்படத்தை பார்த்து குவியும் வாழ்த்துக்கள்

nandhini

Tamil Nadu | தமிழ் நாடு

பிணையில் வந்த நந்தினி திருமணம் முடிந்தது.. புகைப்படத்தை பார்த்து குவியும் வாழ்த்துக்கள்

தமிழ்நாட்டில் பலரும் மதுபான கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அரசு அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பல தெருக்களில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து அரசாங்கமே நடத்தி வருகின்றனர். இதனை எதிர்த்தும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது பெற்றோர் ஆனந்தன் இருவரும் மதுபான கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தது மட்டுமின்றி பல போராட்டங்கள் நடத்தினர்.

அதனால் இவர்கள் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து ஜூன் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய நந்தினி ‘ டாஸ்மாக் மூலமாக வழங்கும் பாட்டில்கள் உணவு பொருளா?இல்லை போதை பொருளா ’ என கேள்வி எழுப்பினார். அதற்கு நீதிபதி பதிலளிக்காமல் நீதிமன்றத்தை மது அவமதிப்பதாக கூறி ஜூலை 9ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

ஆனால் நந்தினிக்கு ஜூலை மாதம் 5-ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. நீதிபதியின் இந்த செயலை கண்டித்து பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வந்தனர். இப்படி இருக்கும் நிலையில் தற்போது வழக்கை விசாரித்த நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா நந்தினி மற்றும் அவரது தந்தையான ஆனந்தனையும் சொந்தப் பிணையில் வெளிவிடுவதாக உத்தரவிட்டார்.

நந்தினிக்கும் ஆனந்தனின் நண்பரான கரூரைச் சேர்ந்த சக்திவேல் மகன் ஜோதிபாசுவுக்கும் நந்தினிக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மதுரை மாவட்டம் தென்னம்மாநல்லூர் கிராமத்தில் உள்ள கோயிலில் நந்தினி மற்றும் குணாஜோதிபாசு திருமணம் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது.

மேலும் எங்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு அளித்த மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நன்றி தெரிவித்து, எங்களை சிறையில் அடைத்தபோது எங்களுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என இருவரும் கூறியுள்ளனர். இவர்களது திருமணத்திற்கு இளைஞர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

nandhini

nandhini

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top