fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அடுத்த மாதம் நடக்க இருக்கும் என் திருமணம் நின்றாலும் பரவாயில்லை.. நீதிபதியை மிரள செய்த நந்தினி

nandhini

Tamil Nadu | தமிழ் நாடு

அடுத்த மாதம் நடக்க இருக்கும் என் திருமணம் நின்றாலும் பரவாயில்லை.. நீதிபதியை மிரள செய்த நந்தினி

தமிழ்நாட்டில் பலரும் மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கும் முன்மாதிரியாக இருந்தவர் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தையான ஆனந்தன்.

சட்டக் கல்லூரி மாணவியான நந்தினி மதுக்கடைகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். 2014ஆம் ஆண்டு மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதை அடுத்து சட்டக் கல்லூரி மாணவி நந்தினி அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது நந்தினியும் அவரது தந்தையுமான ஆனந்தன் இருவரும் மது ‘ஒரு உணவுப் பொருளாக?’ இல்ல மருந்து பொருளாக ? என பல்வேறு கேள்விகளை நீதிபதியிடம் முன்வைத்தனர்.

அதற்கு நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு எனக் கூறி அவர்களை ஜூலை 9ம் தேதி வரை சிறையில் வைக்க உத்தரவிட்டனர். சட்டக்கல்லூரி மாணவி நந்தினி ஜூலை 5ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் நீதிபதி ஜூலை 9ஆம் தேதி வரை சிறையில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இதனால் தற்போது சட்டக்கல்லூரி மாணவி நந்தினிக்கு சமூகவலைதளங்களில் நீடிசங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். நாட்டிற்கு நல்லது செய்தால் ஏதாவது ஒரு தவறை கண்டுபிடித்து அதனை முன்வைத்து அவர்களைக் குறை கூறி சிறையில் வைப்பது வாடிக்கை ஆகிவிட்டது என பலரும் கூறுகின்றனர். அவர் கேள்வி கேட்டது சரியா தவறா என்பது முக்கியமில்லை ஆனால் அவர் முன்வைக்கும் பூரண மதுவிலக்கு நாட்டிற்கு நல்லது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top