Connect with us

Cinemapettai

ரஜினி வரவே மாட்டாருங்க.. மோசமாக தாக்கிய நாஞ்சில் சம்பத்

nanchil-sambath-rajini

Politics | அரசியல்

ரஜினி வரவே மாட்டாருங்க.. மோசமாக தாக்கிய நாஞ்சில் சம்பத்

நடிகர் ரஜினியின் அரசியல் வருகை குறித்து திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

மண் குதிரையை நம்பி கரைசேர்ந்தோர் யாருமே கிடையாது. அதைப் போலத்தான் ரஜினியின் அரசியல் . ரஜினி அரசியல் கட்சி துவங்க வாய்ப்பு இல்லை. அவர் அரசியலுக்கு வரவும் மாட்டார். இந்த கருத்தில் நான் இப்போதும் உறுதியாக உள்ளேன்.

பா.ஜ.க.வின் ஊதுகுழலாக மட்டுமே அவர் இருப்பார், தொடர்ந்து அப்படியே செயல்படவும் செய்வார். அவர் தனிக்கட்சியும் துவங்கமாட்டார், பிற கட்சிகளிலும் சேரமாட்டார்.

இனி அவர் யாருக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தாலும் அவர்களுக்கு தோல்வி மட்டுமே பரிசாய் கிடைக்கும் என்று வெடித்துள்ளார் சம்பத்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Politics | அரசியல்

அதிகம் படித்தவை

To Top