Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நானா படேகரின் நிஜ வாழ்வு குறித்து உங்களுக்கு தெரியுமா?

Nana patekar

சினிமாவில் வில்லனாக நடித்து வரும் நானா படேகர் தனது வாழ்வில் நிஜ நாயகனாக இருப்பது ரசிகர்கள் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

கல்லூரியில் தொடங்கிய நட்பு மீதான பிரியத்தால் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். ஹிட் இயக்குனர்களுடன் இணைந்து பல படங்களை தந்து இருக்கிறார். நானா படேகர் நடிப்பில் அதீத தனித்துவத்தை பின்பற்றுகிறார். எவ்வளவு பெரிய வசனத்தை கொடுத்தாலும், ஒரே டேக்கில் முடித்து விட வேண்டும் என்பதையே கொள்கையாக கொண்டவர் நானா. 1989 ஆம் ஆண்டு பாரிண்டா திரைப்படத்தில் வில்லனாக நடித்தது. பாலிவுட்டில் அவருக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி தந்தது. அந்த ரோலுக்கான சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் பெற்றார்.

படேகர் பலவகையான பாத்திரங்களில் நடிக்கிறார். தனது படங்களில் எப்போதாவது வில்லனாக நடித்தாலும் பெரும்பாலான கதாநாயகனாக நடிப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். ஒரு வருடத்திற்கு நானா படேகர் மறுப்பது 40 படங்களை என்கிறது பாலிவுட் வட்டாரம். அதிலும், கதை முழுதாக தெரிந்தால் மட்டுமே கால்ஷீட் கொடுப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார். பிரஹார் திரைப்படத்தில் நடித்த போது, இராணுவ அதிகாரி வேடத்திற்காக மிகவும் கடினமான பயிற்சி மேற்கொண்டதால் இந்திய இராணுவத்தில் கெளரவ கேப்டன் தரத்தையும் கொண்டிருக்கிறார். இதுவரை சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த வில்லன் ஆகிய பிரிவுகளின் கீழ் ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கிய ஒரே நடிகர் படேகர் மட்டுமே ஆவார்.

இத்தனை பெருமைகளை உடைய நானா படேகரின் சம்பளம் கோடிகளில் கொடுக்கப்படுகிறது. ஆனால், அவர் வாழ்வதோ ஒரு அறை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு தான். நடிப்பை தவிர நானாவிற்கு சமூக சேவையில் தான் அதிக ஆர்வம் என்பது பலருக்கும் தெரிந்த சேதி. தன் சொத்தில் பாதியை விவசாயிகளுக்கு எழுதி கொடுத்து இருக்கிறார். மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதியில் 2015ம் ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. விவசாயிகள் தற்கொலை சரமாரியாக உயர்ந்தது. அந்த சூழலில், தற்கொலை செய்யாமல் என்னிடம் வாருங்கள். நான் உதவுகிறேன் எனத் தெரிவித்தார்.

சொல்லியபடியே, சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து ”நாம்” என்னும் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார். ஒரே வாரத்தில் 7 கோடி ரூபாய் திரண்டது. அதை தொடர்ந்து, விவசாயிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அந்த நிதியை பிரித்து வழங்கினார். அதுமட்டுமல்லாமல், கைம்பெண்களுக்கு மறு வாழ்க்கை அமைத்து கொடுப்பது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது போன்ற பல்வேறு அறப்பணிகளில் நாம் அமைப்பு ஈடுபடுகிறது.

சினிமாவில் கறாராக இருக்கும் நானா படேகர், உண்மையில் நிஜ ஹீரோ என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top