devi-success-meet--namuthukumar-son-tribute

பிரபு தேவா ஸ்டூடியோ சார்பில் பிரபுதேவா, ஐசரிகணேஷ் இணைந்து தயாரித்த படம் ‘தேவி’. ஏ.எல்.விஜய் இயக்கியிருந்த இப்படத்தில் பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ், சோனுசூட் ஆகியோர் நடித்திருந்தனர்.

தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் வெளியான இப்படம் பெரிய வெற்றி பெற்றது. இதன் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக்கலைஞர்கள் தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.

இந்த படத்தின்அனைத்து பாடல்களையும் கவிஞர் நா. முத்துக்குமார்  எழுதிஇருந்தார். அவருக்கு வழங்க வேண்டிய கேடயத்தை நா. முத்துக்குமார் மகன் ஆதவன் மேடைக்கு வந்து பெற்றுக்கொண்டார். அப்போது அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினார்கள். இது  அவருக்கு கவுரவம் அளிக்கும் நெகழ்ச்சியான தருணமாக இருந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு பட வெற்றி விழாவில் கேடயம் வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தென் இந்திய நடிகர்கள் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பிரபு, ஜெயம்ரவி, கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், ஜீவா, விக்ரம் பிரபு, பரத், பார்த்திபன், டைரக்டர் ரவிக்குமார், நடிகைகள் மீனா, லிசி, சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.