Politics | அரசியல்
கண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என கனவிலும் நினைச்சிருக்க மாட்டார்.. நமது அம்மா
நடிகர் ரஜினிகாந்த் கமல் 60 விழாவில் பேசும் போது, எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். அவரின் ஆட்சி நான்கு, ஐந்து மாதம் கூட தாங்காது என்று எல்லாரும் சொன்ன நிலையில் அதிசயம் நடந்தது. ஆட்சி நீடித்தது.
அது மாதிரியான அதிசயம், அற்புதம் எதிர்காலத்திலும் நடக்கும். தமிழக அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்று தெரிவித்தார்.
இப்படி பேசிய நடிகர் ரஜினிக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா கடும் பதிலடி கொடுத்துள்ளது. அதில், தமிழகத்தில் நிறைய ரீல் தலைவர்கள் இருப்பதாகவும்,. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர ரீல் தலைவர்கள் நினைப்பதாக விமர்சித்துள்ளது.
ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரீல் தலைவர்களுக்கு மத்தியில் ரியல் தலைவராக விளங்குவதாகவும் முதல்வரை நமதுஅம்மா பாராட்டி உள்ளது.
சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றால், ஒரே ஒரு சினிமாவில் நடித்து புகழ் கிடைத்தால் கூட ரீல் தலைவர்கள் அரசியலுக்கு வர நினைப்பதாகவும் . முதல்வராக ஆசைப்படுவதாகவும் ஆனால் அதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்றும் நமது அம்மா தாக்கியுள்ளது.
முதல்வர் பழனிசாமி கஷ்டப்பட்டு முன்னேறியவர் என்று கூறியுள்ள நமது அம்மா, ஒரு தொண்டன் தலைவன் ஆக முடியும் என்பதையும் தமிழ் உலகை ஆள முடியும் என்று நிரூபித்தவர் முதல்வர் என்றும் அவர் மக்களுக்கு சேவை செய்து முன்னேறியவர். என்றும் பாராட்டி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்று கூறியதற்கு பதிலடியாக, கண்டக்டராக பணியை தொடங்கிய ரஜினி, ஒரு சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார் என்று ரஜினியை நமது அம்மா நேரடியாக விமர்சனம் காலம் கொடுக்கும் வாய்ப்பை பயன்படுத்தி உழைப்பவர்கள் முன்னேறுவார்கள் என்றும் அப்படித்தான் முதல்வர் பழனிசாமியும் முன்னேறினார் என்றும் நமது அம்மா நாளிதழ் கூறியுள்ளது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
