Tamil Cinema News | சினிமா செய்திகள்
நம்ம வீட்டுப் பிள்ளை சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய பிரபலங்கள்.. அட காலக்கொடுமையே
சிவகார்த்திகேயனுக்கு நம்ம வீட்டு பிள்ளை ஒரு வெற்றிப் படமாக அமைந்ததா என்றால் படம் பார்த்த ரசிகர்களுகுதான் தெரியும். பழைய கதை என்றாலும் என்று காலத்திற்கு ஏற்றது போல் கொஞ்சம் மாற்றி இயக்குனர் பாண்டியராஜன்.
மிஸ்டர் லோக்கல் அடைந்த தோல்வியால் சிவகார்த்திகேயன் இனி சினிமாவில் இல்லை என எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத சிவகார்த்திகேயன் நல்ல குடும்ப கதையை தேர்ந்தெடுத்து நடித்தார்.
அண்ணன் தங்கச்சி பாசம் கதையை மையமாக வைத்து சில வாரங்களுக்கு முன் வெளியிட்ட இந்தப்படம் வெற்றி பெற்று நல்ல வசூல் செய்துள்ளது என அவர்களே ஒரு சக்சஸ் பார்ட்டி வைத்து கொண்டாடி தள்ளியுள்ளனர்.
உண்மை நிலவரம் படத்தை வாங்கியவர்களுகுதான் தெரியும். சக்சஸ் பார்ட்டி வைத்து கொண்டாடினால் மட்டும்தான் மேலும் தியேட்டர்களில் சில காலம் இருக்கும் என்பதே இவர்களது நோக்கம்.
