namitha

எழுதி வைத்துதான் எல்லாம் பேசுகிறார்கள் என்றாலும் அதன் விளம்பரத்தால் திட்டி திட்டியே பிக்பாசை ஹிட் செய்து விட்டார்கள் நம்ம ரசிகர்கள். அதில் பங்கேற்ற பல பேரில் நம்ம நமிதாவின் நிலைமை ரொம்ப மோசமா போகிறதாம். சினிமா இல்லாமல் இங்க வந்தவர் இருந்த கொஞ்ச நஞ்ச வாய்ப்பும் போயிடுச்சாம். திரும்ப ஊருக்கே போனாலும் போவர் என்று சொல்கிறார்கள்.

ஆரம்பத்தில் கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தவர், இப்போது தன் கிக்கிலி பிக்கிலி தமிழில் என்னென்னவோ உளறிக் கொண்டிருக்கிறார். (காயத்ரி ரகுராம் ஓவியாவை, ‘மூஞ்சும் முகரக்கட்டையும்’ என்று திட்ட, வாட் மூஞ்சு? வாட் முகரக்கட்டை? என்று சந்தேகம் கேட்டு ஆங்கிலத்தில் விளங்கிக் கொண்டதெல்லாம் செமக் காமெடி)

அது வரைக்கும் கூட ஓ.கே. ஆனால் ஓவியா இல்லாத நேரத்தில் அவர் பற்றி பேச ஆரம்பித்த நமீதா, “உங்களுக்கு தெரியுமா? அவளுக்கு கேன்சர் இருக்கு. அவ பேமிலி கேன்சர் பேமிலி” என்றார் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், கொடூரமான கேன்சர் நோய்க்கு தன் தாயை பலி கொடுத்திருந்தார் ஓவியா. அதுமட்டுமல்ல… அந்த கடைசி நேரத்தில் அம்மாவிற்கு பணிவிடை செய்யவும் சிகிச்சைக்காக பணம் புரட்டவும் அவர் பட்ட பாடு, இன்டஸ்ட்ரியில் சிலர் மட்டுமே அறிந்த சோகம்.

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் நமீதா ஓவியாவை அப்படி விமர்சித்தார். இன்று நம்மால் எறியப்படுகிற ஒவ்வொரு வார்த்தை நெருப்பும் நாளை நம் தலையிலேயே வந்து விழும் என்பதை துளி கூட அறிந்திராத நமீதாவை, இந்தப்பாவம் அடுத்த பிறவியிலும் துரத்தும். அதிலென்ன சந்தேகம்?