நமீதா சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்குமுன் அவர் ஓவியா உட்பட சிலரிடம் சண்டை போட்டார். மேலும் அவர் நடிகர் பரணி தன்னிடம் தவறாக நடந்தார் என கூறியது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில் நடிகை நமீதா இன்று இன்ஸ்டாகிராமில் இதுபற்றி ஒரு பதிவை எழுதியுள்ளார். அதில் ‘பாதி தான் உண்மை, இது போலி, இந்த ஷோவின் இயக்குனர்கள் ஏமாற்றுவதில் வல்லவர்கள், அவர்கள் காட்டுவதை வைத்து என்னை பற்றி மக்கள் தவறாக புரிந்துகொண்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

24 மணி நேரத்தை 1 மணி நேரமாக குறைத்து பல விஷயங்களை தவறாக சித்தரித்துவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிக் பாஸ் வீடு ஒரு நரகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.