பகத் பாசில் மலையாளத்தில் நடித்த “மகேஷிண்ட பிரதிகாரம்” படம், நல்ல வசூல் செய்தது.

மகேஷிண்ட பிரதிகாரம் படத்தின் தமிழ் ரீமேக் படத்தை பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க உதயநிதி ஸ்டாலின் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் ஹிரோயின் வேடத்திற்கு மலையாள நடிகையான நமீதா பிரமோத் நடிக்க இருக்கிறாராம். இவர் ஏற்கனவே தமிழில் ’என் காதல் புதிது’ என்ற படத்தில் லேசாக வந்து தலையை காட்டினார்.

மலையாளத்தில் விக்ரமாதித்யன், அமர் அக்பர் அந்தோணி, டிராபிக், போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

நான் சொன்னது இந்த நமீதாவைத்தான் ப்ரோ. நீங்க அந்த நமீதாவை நினைச்சுட்டா நான் என்ன செய்ய ப்ரோ.